சாரதா நவராத்தி விழா: ஸ்கந்த மாதா அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2026 10:10
புதுச்சேரி: தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் நேற்று ஸ்கந்த மாதா அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், 7ம் ஆண்டு சாரதா நவராத்திரி சத சண்டி மகா ஹோமம் லாஸ்பேட்டை இ.சி.ஆர் சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த 11ம் தேதி துவங்கி, வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. ஐந்தாம் நாளான நேற்று காலையில் கோ பூஜை, அஸ்வ பூஜை, நவாவரண பூஜை, சுவாசினி பூஜை, பின் 108 திரவியங்களை கொண்டு யாகம் நடந்தது. பட்டு புடவை, தங்க திருமாங்கல்யம் ேஹாமத்தில் அர்ப்பணம் செய்யப்பட்டது. சண்டி மகாதேவி ஸ்கந்த மாதா அலங்காரத்தில், காட்சியளித்தார். மாலையில், பாகூர் வசந்த் நாட்டிய வர்ஷிணி ஆர்ட் அகாடமி பள்ளி மாணவர்களின் பரத நாட்டியம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தர்ம சம்ரக் ஷண சமிதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.