சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், இந்துசமய அறநிலையத்துறை மண்டல ஆணையர் சுந்தரராஜன் ஆய்வு செய்தார். விழா ஏற்பாடு, பக்தர்கள் வசதி குறித்து கேட்டறிந்தார். அலுவலக பைல்களை ஆய்வு செய்தார். ஆய்வின் போது செயல்அலுவலர் தனபாலன், பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி உடனிருந்தனர். கோயில் செயல் அலுவலர் தனபாலன், "" இது வழக்கமான ஆய்வுப்பணிதான், என்றார்.