Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பட்டீஸ்வரர் கோயிலில் தேவாரம் பாடி ... நவராத்திரி எட்டாம் நாள்: மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் மதுரை மீனாட்சி நவராத்திரி எட்டாம் நாள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி விழா: முத்தங்கி அலங்காரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் அருள்பாலிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவராத்திரி விழா: முத்தங்கி அலங்காரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

17 அக்
2026
11:10

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஏழாம் நாளான இன்று (சனிக்கிழமை), அன்னை மீனாட்சி முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான நவராத்திரி திருவிழா, இந்த ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 20-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி, அம்மன் சன்னதியின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.


விழாவின் முதல் நாளான அக்டோபர் 11-ஆம் தேதி அன்னை மீனாட்சி ராஜராஜேஸ்வரி அலங்காரத்திலும், இரண்டாம் நாளான அக்டோபர் 12-ஆம் தேதி அர்த்தநாரீசுவரர் திருக்கோலத்திலும், மூன்றாம் நாளான அக்டோபர் 13-ஆம் தேதி கோலாட்டம் அலங்காரத்திலும், நான்காம் நாளான அக்டோபர் 14-ஆம் தேதி பட்டாபிஷேகத் திருக்கோலத்திலும், ஐந்தாம் நாளான அக்டோபர் 15-ஆம் தேதி தபசு திருக்கோலத்திலும் காட்சியளித்தார். ஏழாம் நாளான இன்று முத்தங்கி அலங்காரத்தில் அன்னை மீனாட்சி அருள்பாலித்தார்.


நவராத்திரி விழாவையொட்டி, மீனாட்சி அம்மன் சன்னதி மற்றும் கொலு மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 அரங்குகளில் பல்வேறு தெய்வங்களின் திருவுருவச் சிலைகள், அம்பிகையின் அவதாரங்கள் மற்றும் திருவிளையாடல் புராணக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றைப் பக்தர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.


மேலும், கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் தினமும் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதில் ஆன்மிகச் சொற்பொழிவுகள், திருமுறை இன்னிசை, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், வீணை இசைக் கச்சேரி, கர்நாடக சங்கீதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இதனால் நவராத்திரி விழா நாள்களில் கோயில் வளாகம் ஆன்மிகம் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் விழாக்கோலம் பூண்டுள்ளது.


நவராத்திரி விழா நாள்களில் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவர் அன்னை மீனாட்சிக்கு மட்டுமே தேங்காய் உடைத்தல் மற்றும் அர்ச்சனைகள் செய்யப்படும். மூலஸ்தான அம்மன் சன்னதியில் திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும் நேரங்களில், மூலஸ்தான அம்மனுக்கு நேரடியாகத் தேங்காய் உடைத்தல் மற்றும் அர்ச்சனைகள் நடத்தப்படாது எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஒன்பதாம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி அஸ்வ ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆயுதபூஜையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கொடுந்திரபுள்ளி அக்ரஹாரம் ஆதிகே சவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலையில், போதுமான அளவு ‘அரவணை’ பிரசாதம் கையிருப்பில் இருப்பதாக திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar