கடலுார் மாவட்டம், விருத்தாசலம், எருமனுார் சாலையில், ஆதி கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இங்கு, நேற்று மாலை 6:00 மணியளவில், பெண் மயில் ஒன்று உடல்நலம் குன்றிய நிலையில் நடக்க முடியாமல் சோர்வுடன் வந்தது.பின்னர், மூலவருக்கு முன்னதாக நின்ற மயில், சிறிது நேரத்தில் சன்னதியை சுற்றி வந்து, ‘உன்னிடம் சரணடைந்தேன்’ என்பதுபோல சோர்வுடன் அமர்ந்தது. அங்கிருந்த பக்தர்கள் தண்ணீர், தானியங்களை கொடுத்து தேற்றினர்.தகவலறிந்த வனத்துறை அலுவலர்கள் மயிலை மீட்டு, கால்நடை மருத்துவரிடம் முதலுதவி சிகிச்சை அளித்து, காப்புக்காட்டில் பத்திரமாக விடப்படும் என உறுதியளித்தனர். இதனால் பக்தர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.