Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விஜயதசமி: தினமலர் சார்பில் ... விஜயதசமி: வெற்றித்திருநாளில் அம்பிகையை வழிபட நினைத்தது நிறைவேறும்.. நல்லதே நடக்கும்! விஜயதசமி: வெற்றித்திருநாளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி ஆண்டவர் கோவிலில் வித்யாரம்பம்: முதல் எழுத்து...: வாழ்நாள் நினைவு.. குழந்தைகளின் பெற்றோர் நெகிழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடபழனி ஆண்டவர் கோவிலில் வித்யாரம்பம்: முதல் எழுத்து...:  வாழ்நாள் நினைவு.. குழந்தைகளின் பெற்றோர் நெகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

20 அக்
2026
10:10

சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து தொடக்க கல்வியை ஆரம்பிக்கும், வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பிரதானமாக, அம்பாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரம் செய்யப்படுகின்றன. விழாவின் நிறைவு நாளான நேற்று, சரஸ்வதி அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று மாலை, சகஸ்ரநாம பாராயணம் செய்தனர். இதைத்தொடர்ந்து வேத பாராயணம், திருமுறை பாராயணம், கொலு பாட்டு நடந்தது.இதைத் தொடர்ந்து,  விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சக்தி கொலு நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர். சிறார்களிடம் ஆன்மிகத்தை வளர்க்கும் வகையிலும், அவர்களுக்கு ஊக்கத்தை ஏற்படுத்தி கோவிலுக்கு வரும் எண்ணத்தை கொண்டு வரவும், தினமும் அறிவுத்திறன் போட்டி நடத்தப்பட்டு, பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.


வித்யாரம்பம்: விஜயதசமியை முன்னிட்டு, இன்று காலை 7:30 மணி முதல் 10:00 மணி வரை, 2.5 வயது முதல் 3.5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு விரல் பிடித்து தொடக்க கல்வியை ஆரம்பிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான குழந்தைகள் வடபழனி ஆண்டவரை தரிசித்து அ எழுதி கல்வியை துவங்கினர்.  குழந்தையின் கல்விப் பயணத்தில் முதல் எழுத்து எழுதும் தருணம், பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் என்றும் நினைவில் நிற்கும் நிகழ்வாகும். விஜயதசமி நன்னாளில் பெரியவர்களின் ஆசியுடன் அரிசியில் ‘அ’ எனும் முதல் எழுத்தை எழுதுவது, கல்வியின் மீது குழந்தைக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் ஓர் அழகிய தொடக்கமாக இன்றைய தினம் அமைந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேர்வை நடந்தது.முருகனின் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா ... மேலும்
 
temple news
திருமலை,  திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்வான ... மேலும்
 
temple news
கோவை: தினமலர் நிர்வாகம் சார்பில் ராம் நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில் வித்யாரம்பம் நிகழ்ச்சி பிஞ்சுவிரல் ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோவிலில் பால ராமரைத் தரிசிக்க வரும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar