Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி ஆண்டவர் கோவிலில் ... குக்கே சுப்ரமண்யா கோவிலில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு குக்கே சுப்ரமண்யா கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜயதசமி: வெற்றித்திருநாளில் அம்பிகையை வழிபட நினைத்தது நிறைவேறும்.. நல்லதே நடக்கும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விஜயதசமி: வெற்றித்திருநாளில் அம்பிகையை வழிபட நினைத்தது நிறைவேறும்.. நல்லதே நடக்கும்!

பதிவு செய்த நாள்

20 அக்
2026
10:10

எச்செயலைச் செய்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை நமக்கு தந்தருளும் நாளே விஜயதசமி. நவராத்திரி முடிந்து பத்தாவது நாளில் விஜயதசமி கொண்டாடுகிறோம். எருமை வடிவில் வந்த மகிஷாசுரனை அம்பிகை  தனது சூலாயுதத்தால் வதம் செய்து மகிஷாசுர மர்த்தினியாக அருள் செய்த நாள் இது.. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர்கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர்.. விஜயதசமி நாளில் வன்னிமரத்தை 21 முறை வலம் வந்து வழிபட்டால் எண்ணியது ஈடேறும்.


நவராத்திரி 9 நாட்களுக்குப் பின் 10-வது நாளை விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். விஜய என்றால் வெற்றி என்று பொருள். அன்றைய தினத்தில் அட்சராப்யாசம் - துவக்கக் கல்வி, அன்னப்ரசன்னம் -- குழந்தைக்கு முதன்முதலாக சோறுட்டுவது போன்றவற்றைத் துவங்குவது சிறப்பு. காலரூபிணியான அம்பிகைக்கு லலிதா சகஸ்ரநாமத்தில், விஜயா என்ற நாமம் உண்டு. புரட்டாசி மாத சுக்ல பட்ச தசமியன்று, அதாவது - விஜய தசமியன்று மாலையில் நட்சத்திரங்கள் தோன்றும் நேரத்துக்கு விஜயா என்று பெயர். அந்த நேரத்தில் துவங்கும் சகல காரியங்களும் வெற்றி பெறும் என்று புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. விஜய தசமியில் தான் ராமன் அம்பெய்தி ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோரை மாய்த்ததாக சொல்லப்படுகிறது. மேலும், பாண்டவர்கள் அஞ்ஞான வாசத்தின் போது வன்னிமர பொந்தில் தங்கள் ஆயுதங்களை ஒளித்து வைத்திருந்து, பின்னர் அவற்றை வெளியே எடுத்து விஜய தசமியில் தான் பூஜை செய்தனர் எனப்படுகிறது.

வனவாசத்தின் போது ஸ்ரீதுர்கா நக் ஷத்திரமாலா துதியை பாண்டவர்கள் ஜெபிக்க, தேவியின் அருளும், அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களின் ஆசியும் அவர்களுக்குக் கிடைத்தன.


அஞ்ஞானவாசம் முடிந்த பின், வன்னி மரபொந்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை வெளியே எடுத்து, அம்மரத்தடியில் வைத்து 9 நாட்கள் வழிபட்டு 10-ம் நாளான விஜய தசமியில் எடுத்துக் கொண்டனர். விஜயனால் பூஜிக்கப்பட்டதால் விஜய தசமி என்றும் வன்னி நவராத்திரி மற்றும் வன துர்கா நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது. விஜய தசமியன்று வன்னிமரத்தை 21 முறை பிரதட்சணம் செய்தால், நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.இன்றைய நாளில் புதிதாக கல்வி, கலைகளை கற்க துவங்க ஏற்ற நாள். இன்றைய தினம் குருவை சந்தித்து வணங்கி, ஆசி பெறுவது அவசியம். கொலு பொம்மைகளை இன்றிரவு பால் நிவேதனம் செய்து, படுக்க வைத்து விடவேண்டும். மறுநாள் கற்பூரம் ஏற்றி, மங்கள ஆரத்தி காட்டி பூஜை செய்து, பொம்மைகளை எடுத்து பத்திரப்படுத்தலாம். ஜெயஜெயதேவி துர்காதேவி என இன்று அம்பிகையை வழிபடுவோம்.. உலக உயிர்கள் எல்லாம் நலமோடு வாழட்டும்!

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு, கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் நிறைவு நாளான இன்று, ஜம்பூ சவாரி ஊர்வலம் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை அருகே ஆழியாறு அணை கரையில் உள்ள, ஆதாளி அம்மன் கோவிலில் மழை வேண்டி விவசாயிகள் ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar