தானபல விரதம்: சிவன், பெருமாளை வழிபட்டு கொடுக்கும் தானம் மிகுந்த புண்ணியத்தைத் தரும்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2026 07:10
விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது நம்பிக்கையாகும். தானபல விரதம் என்பது ஐப்பசி மாதத்தில் வளர்பிறை திரயோதசி திதியில் கடைப்பிடிக்கப்படும் ஒரு சிறந்த விரதமாகும். இன்று விரதம் இருந்து வழிபடுவதால் வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கும். புண்ணிய பலன்கள் பெருகும்.
நாம் செய்யும் தர்ம காரியங்கள் இந்த பிறவியில் மட்டுமல்லாமல், மறுமையிலும் நமக்கு நல்ல பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை. பிறருக்கு உதவி செய்வதன் மூலம் கிடைக்கும் ஆத்ம திருப்தியும், மன அமைதியும் இந்த விரதத்தின் முக்கிய நோக்கமாகும். வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து, தீபம் ஏற்றி, இஷ்ட தெய்வம், சிவன், பெருமாளை வழிபட வேண்டும். இன்று இயலாதவர்களுக்கு உணவு, உடை அல்லது தகுந்த தானங்களை வழங்குவது எடுத்த காரியத்தை வெற்றியாக்கும்!