திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் 12 ஜோதிர் லிங்க வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2026 07:10
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் லிங்க தரிசனம், வழிபாடு நேற்று துவங்கியது.
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் தலைமை வைத்து துவக்கி வைத்தார். பொதுச்செயலாளர் மனோகர், மாநில அமைப்பாளர் ராஜேஷ், மாநிலச் செயலாளர் முத்து குமார், அகில இந்திய பார்வர்டு பிளாக் நிறுவனர் திருமாறன் ஜி கலந்து கொண்டனர். 12 ஜோதிர் லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்பு பக்தர்கள் ஜோதிர் லிங்கத்திற்கு புனித நீர், பன்னீர் அபிஷேகம் செய்தனர். இன்று காலை 9:00 முதல் பகல் 12:00 மணி வரையிலும், மதியம் 3:00 முதல் மாலை 6:00 மணி வரையிலும், நாளை காலை 7:00 முதல் காலை 10:00 மணி வரையிலும் பக்தர்கள் ஜோதிர் லிங்கத்திற்கு அபிஷேகங்கள் செய்யலாம். மதியம் 1:00 மணிக்கு தீபாராதனை முடிந்து அன்னம் பிரசாதம் வழங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.