Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ரூ. 55 ... கோவில் திருப்பணிக்கு முதல்வர் ரூ.19 லட்சம் நிதி கோவில் திருப்பணிக்கு முதல்வர் ரூ.19 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கோயில் யாகசாலையை மாற்ற தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கோயில் யாகசாலையை மாற்ற தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள்

29 அக்
2026
10:10

மதுரை: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா யாகசாலையை வேறு இடத்திற்கு மாற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது. திருச்செந்துார் கோயில் தேவஸ்தான விதாயகர்த்தா சிவராம சுப்பிரமணிய சாஸ்திரி, கோயில் சுதந்திர பரிபாலன ஸ்தலத்தார் சபை செயலர் முத்துகிருஷ்ணன் ஐயர் தாக்கல் செய்த பொதுநல மனு: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 2026 மற்றும் அதற்கு பிந்தைய ஆண்டுகளில் நடைபெறவுள்ள கந்த சஷ்டி விழாவின் யாகசாலை பூஜைகளை அக்கோயிலின் முதல் பிரகார வள்ளி, தெய்வானை சன்னதிகளுக்கு இடையே அமைந்துள்ள, வழக்கமாக யாகசாலை பூஜைகள் நடைபெறும் மண்டபத்தில் நடத்த வேண்டும். மரபு, ஆகம விதிகளுக்கு முரணாக சஷ்டி யாகசாலையை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.


நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: விதாயகர்என்பவர் யாகசாலை அமைய வேண்டிய இடம் எப்போதும் இருந்த இடமே என குறிப்பிடும்போது, கோயில் நிர்வாகத்தினர் அதன்படியே செயல்பட வேண்டியது அவசியம். யாகசாலையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மற்றும் வரும் ஆண்டுகளுக்கான கந்த சஷ்டி யாகசாலை மனுவில் குறிப்பிட்டுள்ள வழக்கமான இடத்திலேயே நடைபெற வேண்டும். இடைக்கால உத்தரவானது, இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது. இவ்விவகாரத்தில் ஏற்கனவே ஒரு மேல்முறையீட்டு வழக்கில் பிறப்பித்த தீர்ப்பு சரியானதா என்பதை மறுபரிசீலனை செய்ய, கூடுதல் நீதிபதிகள் அமர்வை அமைக்க பரிசீலிக்க வேண்டும். இவ்வழக்கு ஆவணங்களை தலைமை நீதிபதியிடம் பதிவுத்துறை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி விரத தினமாகும். ... மேலும்
 
temple news
திருப்பதி:  இந்தியாவின் அதிநவீன நேவிகேஷன் தொழில்நுட்பதற்காக நாளை இரவு அனுப்பக்கூடிய சேட்டிலைட் ... மேலும்
 
temple news
மதுரை:குருவின் அருள் இருந்தால் தான், ஒருவருக்கு மணவாழ்வு, குழந்தைப்பேறு உண்டாகும். இவற்றில் தடை ... மேலும்
 
temple news
லண்டன்: இந்தியாவுடனான உறவை மிக வலுவான நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரிட்டன் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கேதார்நாத் தலத்தில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar