சிவகாமசுந்தரி அம்மன் கோவிலில் ஐப்பதி பூர உற்சவம் துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2026 10:10
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகாமி அம்மன் கோவிலில் ஐப்பசி பூர உற்சவம் துங்கி நடந்து வருகிறது.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவில் சிவகங்கை மேற்குகரையில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலில் உள்ளது. ஒவ்வொறு ஆண்டும் ஐப்பசி பூர உற்சவம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு ஐப்பசி பூர உற்சவம் கடந்த 26 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது வரும் நவம்பர் .3-ம் தேதி திருத்தேர் உற்சவமும், மாலை யாகசாலை பூஜை துவங்குகிறது. அம்பாளுக்கு லட்சார்ச்சனையும் நடைபெற உள்ளது. 4-ம் தேதி பட்டு வாங்கும் உற்சவம் மற்றும் பூரச்சலங்கை உற்சவமும், உற்சவ அம்பாளுக்கும் மகாபிஷேகம் மற்றும் மகாதீபாராதனையும் நடைபெறுகிறது. 5ம் தேதி இரவு ஸ்ரீசிவானந்த நாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யான உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்துவருகின்றனர்.