சாலவாக்கம்: பெருநகர் புதிய காலனி பகுதியில், முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடைபெற்றது.
உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் ஊராட்சி, பெருநகர் புதிய காலனி பகுதியில், முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு கணபதி பூஜை, கோ பூஜை, மாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, நேற்று காலை 9:00 மணிக்கு முத்து மாரியம்மன் கோவில் யாகசாலையில் இருந்து கலச புறப்பாடு நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு மூலவருக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசதனம் செய்தனர்.