விழுப்புரம் வழுதரெட்டி, திருநகரில் தையல் நாயகி அம்மை உடனுறை வைத்தீசுவரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் அதிகாலை 5:45 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 6:00 மணிக்கு விநாயகர், முருகர், நந்தியம்பெருமான், சண்டீகேசுவரர், நால்வர், பைரவர், நவகிரகம் ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிேஷகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, 8:15 மணிக்கு பேரொளி வழிபாடு, 9:15 மணிக்கு விமானங்களுக்கு கும்பாபிேஷகம், 9:30க்கு மூலத்திருமேனிகளுக்கு கும்பாபிஷேக வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து, மாலை 5:00 மணிக்கு அம்மையப்பர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதிமக்கள் செய்தனர்.