ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம் துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29அக் 2026 10:10
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்ஸவம் இன்று முதல் துவங்கியது.
இன்று மாலை 6:45 மணிக்கு கோயில் தெற்கு பிரகாரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் ஊஞ்சலில் எழுந்தருளினர். கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் திருவாய்மொழி சேவகாலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். செப்.4 வரை 7 நாட்கள் ஊஞ்சல் உற்ஸவம் நடக்கிறது.