Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வியட்நாமில் கண்டெடுக்கப்பட்ட 1,500 ... அவிநாசியில் ஒரு கோடி காயத்ரீ ஜப ஹோமம் அவிநாசியில் ஒரு கோடி காயத்ரீ ஜப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்த்தமும், அறிவியலும் கொண்டவை நமது விழாக்கள்: விழிப்புணர்வு சொற்பொழிவில் தகவல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அர்த்தமும், அறிவியலும் கொண்டவை நமது விழாக்கள்: விழிப்புணர்வு சொற்பொழிவில் தகவல்

பதிவு செய்த நாள்

30 அக்
2026
12:10

சூலுார்: ‘‘நாம் கொண்டாடும் பண்டிகைகள், விழாக்கள் அர்த்தமும், அறிவியலும் பொதிந்தவை,’’ என, சொற்பொழிவாளர் பத்மா ராஜகோபால் பேசினார். முத்துக் கவுண்டன்புதுார் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், 57வது மாதாந்திர விழிப்புணர்வு சொற்பொழிவு, விவேகானந்தர் அரங்கத்தில் நடந்தது.

சென்னையில் உள்ள ‘அறம் வளர்த்த நாயகி’ சேவை மையத்தை சேர்ந்த சொற்பொழிவாளர் பத்மா ராஜகோபால், ‘நமது விழாக்கள்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

நம் நாட்டில் கொண்டாடப்படும் ஒவ்வொரு விழாக்களும், நம் சமுதாயம், குடும்பங்கள் ஒற்றுமையாக, ஆரோக்கியமான தெளிந்த சிந்தனையோடு இருக்க ஏற்படுத்தப்பட்டவை. நமது விழாக்கள், பண்டிகைகள், கடைபிடிக்கும் விரதங்களில், அர்த்தங்களும், அறிவியலும் பொதிந்துள்ளன. தனிமனிதன் மற்றும் சமுதாயத்தின் நல்வாழ்வை கருதி, நமது முன்னோர், விழாக்களை உருவாக்கி கொண்டாடினர். அதன் பின்னணியில் மனம் பக்குவப்படுதல், உடல்நலம் சீராகுதல், பாவங்கள் நீங்குதல் உள்ளிட்ட நற்காரணங்கள் உள்ளன.

சூரியனை அடிப்படையாக கொண்டு தமிழ் புத்தாண்டு சித்திரையிலும், சந்திரனை அடிப்படையாக கொண்டு யுகாதி விழாவும் கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை தினத்தன்று சூரியனும், சந்திரனும் நேர் கோட்டில் வரும். அன்று பெரியவர்களின் ஆசி, நல் வாழ்த்துகள் பெற்றால், அது மேலும் வளர்ந்து நல் வாழ்க்கையை கொடுக்கும். அன்று ஏழைகளுக்கு தானம் செய்தால், நம்முடைய புண்ணியம் வளரும்.

புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழா, உற்சாகமாக ஒரே மாதிரியாக கொண்டாடப்படுவது நமது நாட்டின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது. இருளை போக்கி ஒளியை தருவது தீபாவளி பண்டிகை. தை மாதம் மாட்டு பொங்கல் அன்று திருவண்ணாமலையில் நடக்கும் திருவிழாவில், தம்பதியினர் பங்கேற்றால், அவர்களுக்கு இடையில் சிறு, சிறு பிரச்னைகளும் விலகும்.

தர்மம் இருக்கும் இடத்தில் பகவான் கிருஷ்ணர் இருப்பார். தர்மத்தின் பாதையில் நடக்க வேண்டும் என, வலியுறுத்துவது கிருஷ்ண ஜெயந்தி எனும் கோகுலாஷ்டமி பண்டிகை. இப்படி எண்ணற்ற விழாக்கள் நாம் கொண்டாடி வருகிறோம். அதன் அர்த்தங்களையும், பெருமைகளையும், அறிவியல் உண்மைகளையும், குழந்தைகளுக்கு தெரிவித்து வளர்க்க வேண்டும். அதன் வாயிலாக, நல்ல சிந்தனையுள்ள மக்களை கொண்ட சமுதாயம் உருவாகி கொண்டே இருக்கும்.

இவ்வாறு, அவர் பேசினார். இயக்க தலைவர் சம்பத்குமார் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
ஒடிசா: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோவிலில், சுமார் 214 அடி உயரமுள்ள ... மேலும்
 
temple news
ஏக்தா நகர்: குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று அக்டோபர் 30ம் தேதி மாலை நடைபெறவுள்ள நர்மதை ஆரத்தி ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி திருநாளை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி வளாகம் வண்ண விளக்குகளால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar