பதிவு செய்த நாள்
30
அக்
2026
12:10
அவிநாசி: மழை வளம், உலக அமைதி வேண்டி, ஒரு கோடி காயத்ரீ ஜப ஹோமம் அவிநாசியில் நாளை மறுநாள் (நவ. 1ம் தேதி) நடைபெறுகிறது.
சென்னை வேதபாரதி குருகுலம் டிரஸ்ட், திருப்பூர் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மண்டலி மற்றும் அவிநாசி குரு க்ருபா சேவா டிரஸ்ட் ஆகியன இணைந்து, ஒரு கோடி காயத்ரீ ஜப ஹோமம் அவிநாசியில் நடத்துகின்றன. அவிநாசி, மங்கலம் ரோட்டிலுள்ள சுப்பையா சுவாமி திருமடத்தில் நடக்கும் இந்த ஹோமம், 31ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு ஸ்ரீகணபதி ஹோமத்துடன் துவங்குகிறது.
தொடர்ந்து, 7:00 மணிக்கு சங்கல்பம், கட ஸ்தாபனம், ஹோம விதானங்கள் ஆரம்பம், 7:25 மணிக்கு ஹோமம் துவக்கம், 9:00 மணிக்கு ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ராம நாமம், ஸ்ரீலலிதா ஸஹஸ்ராம நாமம் பாராயணம், 10:40 மணிக்கு புக்கொளியூராதினம் காமாட்சிதாச சுவாமிகள் அருளுரை, 11:30 மணிக்கு வேதபாரதி விழிப்புணர்வு கூட்டம் ஆகியன நடக்கிறது.
ஒரே நேரத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட வேதவிற்பன்னர்கள், ஒரு கோடி காயத்ரீ ஜப ஹோமத்தில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி நிறைவாக, மதியம், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஹோமத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், 90470 42460, 95005 44070 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என குரு க்ருபா சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.