பதிவு செய்த நாள்
30
அக்
2026
12:10
கோவை: சுவாமி சதேவானந்த சரஸ்வதி, தினமும் ஆன்லைனில் ஆன்மிக வகுப்பு நடத்துகிறார். நாடு முழுக்க சென்று ஆன்மிக முகாம், சொற்பொழிவு நடத்துகிறார். பள்ளி குழந்தைகளுக்காக தமிழில் ஆன்மிக வகுப்புகளை நவ.,25ல் துவக்குகிறார்; 2027 பிப்.,11 வரை நடக்கிறது.
சுவாமி சதேவானந்த சரஸ்வதி கூறியதாவது:
வருங்கால சந்ததியினருக்கு நம் பாரத நாட்டின் கலாசாரம், பண்பாட்டை கற்பித்து, பயிற்சி அளிக்க வேண்டியது மிக அவசியம். நாட்டுப்பற்று, ஆன்மிக வாழ்வின் மேன்மை, தன்னம்பிக்கை, உடல் மற்றும் மன உளைச்சலை எதிர்கொண்டு, போட்டி நிறைந்த உலகியல் வாழ்வில் முன்னேற பயிற்சி அளிப்பது நோக்கம்.
நம் பாரத கலாசாரம் ஆன்மிகத்தை அடிப்படையாக கொண்டது. உணவு, உடை, உறைவிடம், மொழி, நடத்தை, பழக்க வழக்கங்கள், நுண்கலைகள், வெற்றி-, தோல்வியை எதிர்கொள்ளும் விதம், கல்வி, செல்வம், வீரம் இவற்றை அடையும் வழி, இவை பள்ளி குழந்தைகளின் மனதை நெறிப்படுத்தி, வாழ்வை வளமாக்கும். இதற்கு ஆன்லைன் ஆன்மிக வகுப்பு வழிகாட்டியாக அமையும்.
தமிழ் எழுத படிக்க தெரிந்த 5 வயதில் இருந்து 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் பங்கேற்கலாம். வாரத்தில் 5 நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் நடத்தப்படும். குழந்தைகளுடன் பெற்றோரில் ஒருவர் அல்லது நெருங்கிய உறவினர் ஒருவர் கட்டாயம் பங்கேற்க வேண்டும்.
விவரங்களுக்கு: avg.tamilclass@zohomail.in, 88659 90846 என்ற மொபைல் எண்ணுக்கு வாப்ஸ் அப் செய்தி மூலம் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, கூறினார்.