Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறையில் தீர்த்தவாரி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்தசஷ்டியில் ஆறு நாட்கள் பக்தர்கள் விரதம் இருப்பது ஏன்? யார் என்ன சாப்பிடலாம்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கந்தசஷ்டியில் ஆறு நாட்கள் பக்தர்கள் விரதம் இருப்பது ஏன்? யார் என்ன சாப்பிடலாம்?

பதிவு செய்த நாள்

09 நவ
2026
07:11

அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் வைத்துக்கொண்டார். இந்த போர் ஆறு நாட்கள் நிகழ்ந்தது. இந்த நாட்களே கந்தசஷ்டியாகக் கொண்டாடப்படுகிறது. ஐப்பசியில் தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாளில் இருந்து பிரதமை திதியில் துவங்கி, சஷ்டி திதி வரையில் ஆறு நாட்கள் இந்த வைபவம் நடக்கும். சஷ்டியில் சூரனை சம்ஹாரம் செய்ததால் இதற்கு, கந்த சஷ்டி என்று பெயர் ஏற்பட்டது. திருச்செந்தூரில் இந்த விழா விசேஷமாக நடக்கும். தவிர, பெரும்பாலான முருகன் கோயில்களிலும் இவ்விழா நடத்தப்படும். விழாவின் ஆறாம் நாளில் முருகப்பெருமான், சூரனை சம்ஹாரம் செய்வார். அடுத்த நாட்களில் முருகன் திருக்கல்யாணம் நடக்கும்.  விரத முறை: கந்தசஷ்டி விரதமிருப்பவர்கள் விரதம் துவங்குவதற்கு முதல்நாள் கையில் காப்பு கட்டிக் கொள்வர். இந்த ஆறு நாட்களும் பக்தர்கள் உபவாசம் இருப்பர். சாப்பிடாமல் இருக்க முடியாதவர்கள், பழம், பால் மட்டும் சாப்பிட்டுக் கொள்ளலாம். 


யார் என்ன சாப்பிடலாம்: கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது. காலை, மாலை வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். ஆறுநாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம். மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில் ஜபித்தபடியே கிரிவலம் வருவது நன்மை தரும்.


பலன்: சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வளரும் என்ற பழமொழிக்கேற்ப, சஷ்டி விரதம் இருந்தால், குழந்தை பாக்கியம் உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று  இரவு ஐப்பசி மாத அமாவாசையை ... மேலும்
 
temple news
பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில், இன்று அதிகாலை நடைபெற்ற ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் பைபாஸ் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நேற்று  அமாவாசை தீர்த்தவாரி நடந்தது. பக்தர்கள் புனித ... மேலும்
 
temple news
திருமலை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar