Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லனுர் சக்தி மாகாளியம்மன் ... மடிமைகண்டிகை கிராமத்தில் பெருமாள் சிலை கண்டெடுப்பு மடிமைகண்டிகை கிராமத்தில் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலந்தீபாவளி கொண்டாட்டம் வடசித்துாரில் திருவிழாக்கோலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலந்தீபாவளி கொண்டாட்டம் வடசித்துாரில் திருவிழாக்கோலம்

பதிவு செய்த நாள்

10 நவ
2026
10:11

நெகமம்: கோவை, கிணத்துக்கடவு வடசித்துார் கிராமத்தில் மயிலந்தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, வடசித்துார் ஊராட்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், பல தலைமுறைகளாக தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, இனிப்புகளை பரிமாறி மயிலந்தீபாவளியை கொண்டாடுகின்றனர். கடந்த, 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. வடசித்துாரில், ஹிந்துக்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமிய குடும்பத்தினரும் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்கள் உறவினர்களாக பழகி வருவதால், ஆண்டு தோறும் மயிலந்தீபாவளியில் இஸ்லாமியர்களும் கலந்து கொள்கின்றனர். மேலும், ஜாதி மதம் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றாக பண்டிகையை கொண்டாடுகின்றனர். மயிலந்தீபாவளி நாளான நேற்று, வடசித்துார் ஊராட்சி அலுவலகம் அருகே, ராட்டிணங்கள், பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், இனிப்பு, பலகார கடைகள், பெண்களுக்கான அணிகலன் கடைகள் அமைக்கப்பட்டு ஊரே திருவிழா கோலமாக காட்சியளித்தது. திருமணமாகி வெளியூரில் வசிக்கும் பெண்களும் குடும்பத்துடன், பெற்றோர் வீட்டிக்கு வந்து மயிலந்தீபாவளியை புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து கொண்டாடினர். இஸ்லாமியர்களை, தங்களது வீட்டுக்கு அழைத்து, ஹிந்துக்கள் விருந்து வைத்து, ஒருவருக்கொருவர் நட்பை பகிர்ந்து பண்டிகையை கொண்டாடினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர்: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா  யாகசாலை ... மேலும்
 
temple news
திருப்போரூர் : புகழ்பெற்ற திருப்போரூர் கந்தசாமி கோயிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக ... மேலும்
 
temple news
முருகப் பெருமானை முன்னிறுத்தி கொண்டாடப்படும் முக்கியமான திருவிழா கந்த சஷ்டி. தமிழகம் உள்ளிட்ட ... மேலும்
 
temple news
அன்னூர்: செல்லனுர் சக்தி மாகாளியம்மன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது.அன்னூர் அருகே, செல்லனுர் சக்தி ... மேலும்
 
temple news
பொன்னேரி: பொன்னேரி அருகே, மரத்தின் கீழ், இரண்டு அடி உயரமுள்ள உலோகத்தாலான பெருமாள் சிலையை கிராம மக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar