பரமக்குடி கேதார கவுரீஸ்வரி அம்மன் கோயிலில் ஐப்பசி விழா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2026 11:11
பரமக்குடி: பரமக்குடி கேதார கவுரீஸ்வரி அம்மன் கோயிலில் ஐப்பசி மாத கவுரி நோன்பு விழா துவங்கியது. கோயிலில் நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு வாஸ்து சாந்தி நடந்து, இரவு 7:00 மணிக்கு மேல் நோன்பு உற்சவம் துவங்கியது. அப்போது அம்மன் சிவலிங்க பூஜை அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று அம்மன் கோலாட்டம் ஆடும் திருக்கோலத்தில் அருள்பாலித்த நிலையில், இன்று இரவு ரிஷப வாகனத்தில் வீதி உலா வருகிறார். நாளை அம்மன் ஊஞ்சல் சேவையிலும், நவ., 12 காலை விரதம் இருக்கும் பக்தர்கள் பால் குடங்களை சுமந்து பாலபிஷேகம் நடக்க உள்ளது. தொடர்ந்து இரவு அம்மன் அனந்த சயனத்தில் பூப்பல்லக்கில் வீதி உலா வருவார். ஏற்பாடுகளை தெலுங்கு விஸ்வ பிராமண சபையினர் செய்துள்ளனர்.