குமரக்கோட்டத்தில் கந்த சஷ்டி விழா விமரிசை: பிரகாரம் வலம் வரத் தடை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2026 04:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில், கந்த சஷ்டி விழா இன்று விமரிசையாக தொடங்கியது. விழாவினை முன்னிட்டு, உற்சவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து வருகை தந்த ஏராளமான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், சுவாமிக்கு நெய் மற்றும் நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
வலம் வரத் தடை: வரும் 22ம் தேதி குமரக்கோட்டம் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனால் கும்பாபிஷேகப் பணிகள் தீவிரமாக நடந்து வருவதை முன்னிட்டு, பக்தர்கள் கோவிலின் உட்பிரகாரத்தை வலம் வர தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.