Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் விஸ்வநாதீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்த சஷ்டியை ஒட்டி திருப்புகழ் நிகழ்ச்சி பக்திகமழ பாடிய மாணவ – மாணவியர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கந்த சஷ்டியை ஒட்டி திருப்புகழ் நிகழ்ச்சி பக்திகமழ பாடிய மாணவ – மாணவியர்

பதிவு செய்த நாள்

11 நவ
2026
11:11

சென்னை: ‘ரசிக ரஞ்சனி சபா’ பவுண்டேஷன் சார்பில், கந்த சஷ்டியை ஒட்டி பள்ளி மாணவ – மாணவியர் பங்கேற்கும், ‘திருப்புகழ்’ பாடும் இசை நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர்.சபா அரங்கில் நேற்று நடந்தது. பள்ளி மாணவ, மாணவிருக்கு, இசை துறையில் ஆர்வம் ஏற்படுத்தி, அவர்களை ஊக்குவிக்கும் சேவையை, ரசிக ரஞ்சனி சபா மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கந்த சஷ்டியை ஒட்டி, மாணவர்களுக்கு திருப்புகழ் பாடும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஜெயலலிதா இசை பல்கலை உதவி பேராசிரியரும், இசை பயிற்சியாளருமான பவ்யா ஹரி, மாணவ – மாணவியருக்கு திருப்புகழ் பயிற்றுவித்தார். அவரிடம் கற்றுக்கொண்ட திருப்புகழை, பக்தி மணம் கமழ ஆர்.ஆர்.சபா அரங்கில், மாணவ – மாணவியர் நேற்று பாடினர். திருப்புகழுக்கே உண்டான சந்தம் மற்றும் தாளத்தில் அமைத்து பாடியதும், பள்ளி மாணவ – மாணவியரே, பக்கவாத்திய கலைஞர்களாக பங்காற்றியதும் கூடுதல் சிறப்பு. பூர்வி கல்யாணி, பிலஹரி, ஹுசேனி, பிந்து மாலினி, கல்யாண வசந்தம் உள்ளிட்ட பல ராகங்களில் அமைந்த திருப்புகழ் பாடல்களை பாடி அசத்தினர். இந்நிகழ்ச்சியில், பால வித்யா மந்திர், பி.வி.பி., ராஜாஜி வித்யாஷ்ரம், பி.எஸ்.சீனியர் மேல்நிலைப்பள்ளி, வித்யா மந்திர் உள்ளிட்ட ஆறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் திருப்புகழ் பாடல்களையும், பக்கவாத்தியமும் இசைத்தனர். இந்த நிகழ்வை பார்வையாளர்கள் பெரிதும் ரசித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி 2ம் நாளான இன்று திருப்புகழ் பாடி முருகப்பெருமானை வழிபட நல்லதே நடக்கும். ஐப்பசி மாத வளர்பிறை ... மேலும்
 
temple news
மதுரை அழகர்மலை சோலைமலை மண்டபம் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி பெருந்திருவிழா, இந்த ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விரதம் துவங்கியதை முன்னிட்டு கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவிலுக்குள் முஸ்லிம் மத அடையாளங்களுடன் பெண் ஒருவர் தரிசனம் செய்த ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: இந்திலி பாலமுருகன் கோவிலில் செவ்வாய் கிழமை சிறப்பாக சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar