கூடலுார் முத்தாலம்மன் கோயில் விழா: முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2026 05:11
கூடலுார்: கூடலுார் மேற்கு முத்தாலம்மன் கோயில் விழா நடந்தது.
கூடலுார் மேற்கு முத்தாலம்மன் கோவில் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று அதிகாலை பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் பழங்களை வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். மக்கள் நலன் வேண்டியும், மழை தொடர்ந்து பெய்ய வேண்டியும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். தொடர்ந்து சுவாமி வேடமிட்டு பக்தர்கள் சென்றனர். கரகாட்டம், தப்புத் தாளம், ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகள் நடந்தன. மாவிளக்கு, முளைப்பாரி எடுத்த அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஒக்கலிகர் மகாஜன சங்கத்தினர் செய்திருந்தனர்.