தஞ்சாவூர், திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலத்தில் வரும் நவ. 13ம் தேதி ராகு பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இதையொட்டி இன்று ( 10ம் தேதி ) முதற்கட்ட லட்சார்ச்சனை துவங்கியது.
நவக்கிரகங்களுள் முதன்மையானவராக திகழும் ராகு பகவான் நாகவல்லி, நாககன்னி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். ராகு பகவானின் திருமேனியில் பாலாபிஷேகம் செய்யும் போது அந்த பாலானது நீல நிறமாக மாறும். ராகு பகவான் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி நகர்வார். இந்த நிகழ்வு ராகு பெயர்ச்சி எனப்படுகிறது. அதன்படி வரும் நவ.13-ம்தேதி மாலை 5:14 மணிக்கு ராகுபகவான் கும்ப ராசியிலிருந்து, மகர ராசிக்கு பெயர்ச்சி அடையவுள்ளார். இதையொட்டி நாளை இன்று (10ம் தேதி) லட்சார்ச்சனை துவங்கியது.
ராகு பெயர்ச்சியை முன்னிட்டு 13ம் தேதி மாலை 4:40 மணிக்கு கடம் புறப்பாடும், மகாஅபிஷேகமும், சிறப்பு பாலபிஷேகமும், இரவு ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் புறப்பாடும் நடைபெறவுள்ளது.