மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா
பதிவு செய்த நாள்
13
நவ 2026 05:11
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா இன்று நடக்கிறது. புதுச்சேரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, மொரட்டாண்டியில் 27 அடி உயர விஸ்வரூப மகா சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, நவக்கிரக பெயர்ச்சிகளின்போது சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று 13ம் தேதி மாலை 5:14 மணிக்கு ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் பிரவேசிக்கிறார். அதனையொட்டி, மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள உலகிலேயே மிக உயரமான 12 அடி உயர ராகு மற்றும் கேது பகவானுக்கு தலா 108 லிட்டர் பால் அபிஷேகம், காலை 7:00 மணிக்கு நட்சத்திர ராசி பரிஹார ஹோமங்களும் நடக்கிறது. பகல் 12:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, சகல அபிஷேகம், மாலை 5:14 மணிக்கு ராகு பகவான், கேது பகவானுக்கு பஞ்சலோக ஆபரண கவசம் சாற்றி, மகா தீப ஆராதனை நடக்கிறது. இதில் பரிகாரம் செய்பவர்கள் பாலாபிேஷகத்திற்கு ரூ.100, பரிகார ஹோமம் செய்வதற்கு ரூ.300, தோஷபரிகார அர்ச்சனை செய்வதற்கு ரூ.1,500 கோவில் அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். மேலும், நாகதோஷம், சர்ப தோஷம், காலசர்ப தோஷம், திருமணத் தடை, புத்திரபாக்கியம், ராகு கேது பரிகார தோஷங்களுக்கு பரிகார ஹோமங்கள் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை சிதம்பர கீதாராம் குருக்கள், கீதாசங்கர குருக்கள், லலிதாம்பிகை வேதசிவாகம டிரஸ்ட் செய்து வருகிறது.
|