சத் பண்டிகை விரதம் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்து: பிரதமர் மோடி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2026 09:11
பீஹார், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று (நவம்பர் 13) முதல் 4 நாள் சத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்து, குடும்பத்தின் நல்வாழ்வு மற்றும் செழிப்பிற்காக வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
விழாவின் முக்கிய நாட்களில் பக்தர்கள் ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற நீர்நிலைகளில் புனித நீராடுவார்கள். மாலையில் மறையும் சூரியனுக்கும், மறுநாள் அதிகாலையில் உதிக்கும் சூரியனுக்கும் வழிபாடு நடத்துவார்கள். சத் பண்டிகைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள் நம்பிக்கையிலும் சூரிய வழிபாட்டிலும் வேரூன்றிய, நான்கு நாட்கள் கொண்டாடப்படும் சத் பண்டிகையின் துவக்கத்தை முன்னிட்டு, எனது சக நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விரதம் இருக்கும் அனைவருக்கும் எனது மரியாதையை உரித்தாக்குகிறேன். அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும் என்பதே எனது விருப்பம் என குறிப்பிட்டுள்ளார்.