Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்பாத்தி விஸ்வநாதர் கோவில் தேர் ... கோயில்களில் நாகசதுர்த்தி விழா கோலாகலம்:பக்தர்கள் வழிபாடு கோயில்களில் நாகசதுர்த்தி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணியில் மணவாள மாமுனிகள் அவதார தின விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணியில் மணவாள மாமுனிகள் அவதார தின விழா

பதிவு செய்த நாள்

13 நவ
2026
04:11

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் மணவாள மாமுனிகளுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. கடந்த நவ., 11 துவங்கி இன்று வரை தொடர்ந்து மூன்று நாட்கள் விழா நடந்தது. வைணவ ஆச்சாரியார்களில் மிகவும் போற்றப்படுபவரும் ராமானுஜரின் மறு அவதாரமாக கருதப்படுபவருமான மணவாள மாமுனிகளின் ஜென்ம நட்சத்திரம் ஐப்பசி மாதம் மூலம் நட்சத்திரமாகும். இவர் கி.பி., 1370ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரியில் அவதரித்தார். உடையவர் என்று போற்றப்படும் ராமானுஜரே மீண்டும் மணவாள மாமுனிகளாக அவதரித்து விசிஷ்டாத்வைத தத்துவத்தையும், நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் பெருமையும் உலகிற்கு விளக்கினார். உபதேச ரத்தினமாலை திருவாய்மொழி, நூற்றந்தாதி, பிரபந்தம் உள்ளிட்ட உயரிய தமிழ் மற்றும் வடமொழி நூல்களை இயற்றியுள்ளார்.


இவரது அவதார தினத்தை முன்னிட்டு திருப்புல்லாணி ஆதிஜெகநாதபெருமாள் கோயிலில் உற்ஸவர் மற்றும் மூலவருக்கு விசேஷத் திருமஞ்சனம் சாற்று முறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. இன்று ஒவ்வொரு திருச்சன்னதியின் முன்பாக மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பிரசித்தி பெற்ற கல்பாத்தி தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ள ஐந்தாம் திருநாள் நிகழ்வு ... மேலும்
 
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், நேற்று நாகசதுர்த்தி விழா ... மேலும்
 
temple news
இன்று நவ.13ம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 5:14 மணிக்கு ராகு கும்பத்தில் இருந்து மகரத்திற்கும், கேது ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி விழா இன்று நடக்கிறது.புதுச்சேரி – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar