Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று கோடி சோமவாரம் : சிவ தரிசனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.

பதிவு செய்த நாள்

16 நவ
2026
10:11

மதுரை: மதுரை நவ.25, முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் ஒன்றான கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக துவங்கியது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேறு "அரோகரா" கோஷம் முழங்கிட் சுவாமி தரிசனம் செய்தனர்.


விழாவையொட்டி முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக, ஆதாரதனைகள் நடைபெற்றது. இதையடுத்து சுவாமி தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிட கார்த்திகை தீப கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து தங்கமுலாம் பூசப்பட்ட கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்த அருகம்புல், மா இலை, சந்தனம் குங்குமம், பூமாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டது. கார்த்திகை தீப திருவிழா இன்று துவங்கியதையடுத்து சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் சுவாமிகள் காலையில் தங்க சப்பரத்திரத்திலும் மாலையில் வெள்ளி பூதவாகனம், அன்னம் வாகனம் என்பன உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 23- ம் தேதி இரவு 7.25 மணிக்கு மேல் 7.50 மணிக்குள் சுவாமிக்கு பட்டாபிஷேகமும், வரும் 24-ம் தேதியன்று மாலையில் 6 மணிக்கு மேல் பாலதீபம் ஏற்றப்பட்டு தொடர்ந்து மலைமீது உச்சி பிள்ளையார் கோவிலில் கார்த்திகை மகாதீபமும் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீப திருவிழாவின் முழு ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோடி சோமவாரம் என்பது கார்த்திகை மாதத்தில் வரும் மிக விசேஷமான திங்கட்கிழமையாகும். "கோடி" என்றால் ஒரு ... மேலும்
 
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்க வந்த பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar