அறம் வளத்தீஸ்வரர் கோவிலில் பால்குட ஊர்வலம் விமரிசை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2026 01:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அறம் வளத்தீஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் மற்றும் திருக்கல்யாண வைபவம் நேற்று விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் அறம் வளத்தீஸ்வரர் கோவில் தெருவில் அமைந்துள்ள கோவிலில், வள்ளி தேவசேனா சமேத முருகன் கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழா கடந்த 9ம் தேதி தொடங்கி நடந்து வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் வீரவாகு காப்பு கட்டுதல், வீதியுலா மற்றும் சக்தி வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. சூரப்படை மற்றும் முருகன் வீதியுலாவைத் தொடர்ந்து, வீரவாகு துாது மற்றும் சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது.
விழாவின் நிறைவு நாளான நேற்று திரளான பக்தர்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. மாலை 7:00 மணிக்கு முருகன் திருக்கல்யாண வைபவமும், இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.