கார்த்திகை முதல் நாள்: குமரி தர்மசாஸ்தா கோவிலில் விரதம் துவங்கிய பக்தர்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2026 12:11
குமரி: கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜைகள் இன்று துவங்குவதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவங்கி உள்ள நிலையில் குமரி மாவட்டம் வெட்டுமணி தர்மசாஸ்தா கோவிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சரண கோஷத்துடன் மாலை அணிந்து விரதத்தை துவங்கி வருகின்றனர்
கார்த்திகை ஒன்றாம் தேதியிலிருந்து 41 நாள் மண்டல விரதம் இருந்து சபரிமலைக்கு ஐயப்பன் பக்தர்கள் செல்வது பாரம்பரிய மரபு. அதன்படி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து இருமுடி கட்டுடன் சபரிமலை சென்று ஐயப்பனை வழிபட்டு வருவர். இந்த நிலையில் குமரி மாவட்டத்திலும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் இன்று அதிகாலை முதலே நீராடி கருப்பு,நீலம், காவி ஆடைகள் அணிந்து அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று துளசிமணி,சந்தனம் மாலைகளை அணிந்து விரதத்தை துவங்கினர் இதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டம் வெட்டுமணி பகுதியில் உள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலில் அதிகாலை முதலே திரளான ஐயப்ப பக்தர்கள் திரண்டு பக்தியுடன் சரண கோஷமிட்டு மாலை அணிந்து விரதத்தை துவங்கினர். சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை உட்பட பல பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் வருகை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பாக பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.