Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிலிப்பைன்ஸின் பழமையான ... தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம்: பக்தர்கள் பக்தி பரவசம் தமிழகம் முழுவதும் முருகன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திட்டமிடல் இன்றி திணறும் பக்தர்கள் முத்துக்குமாரசுவாமி கோவிலில் தொடரும் அவலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திட்டமிடல் இன்றி திணறும் பக்தர்கள் முத்துக்குமாரசுவாமி கோவிலில் தொடரும் அவலம்!

பதிவு செய்த நாள்

17 நவ
2026
11:11

பல்லடம்: மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், உரிய திட்டமிடல் இன்றி நடத்தப்படும் விழாக்களால், பக்தர்கள், சொல்ல முடியாத இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.


பல்லடத்தை அடுத்த, மாதப்பூரில், நூற்றாண்டு பழமை வாய்ந்த முத்துக்குமாரசுவாமி கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், சுற்றுவட்டார பகுதி மக்களின் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளது. கந்த சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம் உள்ளிட்ட முக்கிய விழாக்களின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடுகின்றனர். இவ்வாறு, கடந்த இரண்டு நாட்களில் நடந்த சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் ஆகியவற்றில், பல்லடமே திரண்டு வந்தது போல் பக்தர்கள் படையெடுத்து வந்தனர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பக்தர்களின் வருகைக்கு ஏற்ப அடிப்படை வசதிகள் இன்னும் மேம்படுத்தப்படவில்லை. இதனால், ஒவ்வொரு விழாக்களிலும், பக்தர்கள் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.


நேற்று முன்தினம் நடந்த சூரசம்ஹார‌ விழாவில், உரிய முன்னேற்பாடுகள் செய்யப்படாததால், கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். விழாவில் அதிகப்படியான பெண்கள், தாய்மார்கள் பங்கேற்றிருந்த நிலையில், பாதுகாப்பு கேள்விக்குறியானது. பக்தர்கள் பலர் சூரசம்ஹார நிகழ்வை முறையாக கண்டுகளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இது ஒருபுறம் இருக்க, கோவில் வளாகத்தில் உள்ள நான்கே நான்கு கழிப்பறையால், இயற்கை உபாதை கழிக்க முடியாமல் பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர். வழக்கம்போல் போதிய பார்க்கிங் வசதி இன்றி, தேசிய நெடுஞ்சாலை மற்றும் புதிய புறவழிச் சாலை ஆகியவை நிரம்பி வழிந்தன. இவ்வாறு, ஆண்டுதோறும் கோவிலில் நடக்கும் ஒவ்வொரு விழாக்களிலும், அடிப்படை வசதிகளுக்காக பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். கோவிலில் பார்க்கிங் வசதியை விரிவுபடுத்த வேண்டும். குளியலறை வசதியுடன் புதிய கழிப்பிடங்கள் கட்ட வேண்டும். சாலை, குடிநீர், காத்திருக்கும் கூடம் உள்ளிட்ட கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பு.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் மாநாடு பிலிப்பைன்சிஸின் மணிலா நகரில் நடக்கிறது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமையின் காரணமாக கருமை நிறமாக மாறிய கங்கை நதி ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவின் நிறைவாக இன்று வள்ளி, தெய்வானை சமேத ... மேலும்
 
temple news
திருப்பதி : திருமலை ஏழுமலையானுக்கு, இன்று வருடாந்திர புஷ்பயாகம் நடந்தது. உலகத்தை இயற்கை பேரழிவுகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar