Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 11வயது சிறுவனாக ஜெயேந்திரரிடம் ஆசி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கதிர் நரசிங்க பெருமாள் கோவில்களில் கார்த்திகை மாத சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கதிர் நரசிங்க பெருமாள் கோவில்களில் கார்த்திகை மாத சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

18 நவ
2026
10:11

நத்தம்: நத்தம் அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் கார்த்திகை மாத விஷ்ணுபதி புண்ணியகாலத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.


நத்தம் கோவில்பட்டி அக்ரஹாரத்தில் உள்ள பாமா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அதிகாலை விஸ்வரூப தரிசனத்துடன் வழிபாடுகள் தொடங்கின. இதையடுத்து சுவாமிக்கு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு புத்தாடை அணிவித்து, துளசி மற்றும் பல்வேறு வண்ண மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.


இதேபோல் சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலிலும் விஷ்ணுபதி புண்ணியகால சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத கதிர் நரசிங்க பெருமாள் மற்றும் மூலவர் ராமானுஜர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், விஸ்வரூப பூஜைகள் நடைபெற்றன. பால், பழம், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 21 திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, துளசி மாலைகள் சாத்தப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. மேலும் அருகிலுள்ள ஆஞ்சநேயர் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விஷ்ணுபதி புண்ணியகால வழிபாட்டின் ஒரு பகுதியாக பக்தர்கள் கொடிமரத்தை வணங்கி, மலர்களை சமர்ப்பித்து கோவில் பிரகாரத்தை 27 முறை வலம் வந்து வழிபட்டனர். இதில் கோபால்பட்டி, சாணார்பட்டி, நத்தம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோஷம் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய மாதங்களின் முதல் நாளில் கடைப்பிடிக்கப்படும் விஷ்ணுபதி புண்ணியகாலத்தில் மகாவிஷ்ணுவையும், மகாலட்சுமியையும் வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த புண்ணிய காலத்தில் பெருமாளை வழிபட்டு பிரார்த்தனை செய்தால் குடும்பத்தில் நன்மை, செல்வ வளம், மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழாவில் சந்திரசேகரர் பூத வாகனத்தில் ... மேலும்
 
temple news
மதுரை: விஜய யாத்திரையாக வட மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரீ ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த செவிலிமேடு பாலாற்றங்கரையில் கார்த்திகை முதல் நாளான இன்று முடவன் ... மேலும்
 
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் விஷ்ணுபதி புண்ணியகால வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar