திருப்பதியில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தரிசனம்: வேங்கடேசப் பெருமாளுக்கு விசிறி சேவை!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2026 02:11
திருப்பதி: திருமலையில் இன்று புதன்கிழமை (நவம்பர் 25) காலை காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் மரபுப்படி, பழைய அன்னபிரசாத வளாகம் அருகே உள்ள அரச மரத்தடியில் அவருக்கு சிறப்பு மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் எம். ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அலுவலர் சி. வெங்கையா சௌத்ரி ஆகியோர் சுவாமிகளை வரவேற்றனர். பின்னர் அர்ச்சகர்கள், இஸ்திகபால் மரியாதையுடன் மடாதிபதியை பேடி ஆஞ்சநேயர் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வழிபாட்டைத் தொடர்ந்து, ஏழுமலையான் சன்னதியில் பெருமாளுக்கு விசிறி வீசி விஞ்சாமர சேவை செய்து வழிபட்டார். இந்த நிகழ்வில் தேவஸ்தான துணை செயல் அலுவலர் பாஸ்கர், பெய்ஷ்கார் ராமகிருஷ்ணா, பருப்பத்தேதார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.