திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற தயாரானது தீபத்தூண்:பூஜை பொருட்கள் மலைக்கு கொண்டு வரப்பட்டது
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2026 11:11
திருப்பரங்குன்றம்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று மாலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுகிறது.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நவ., 24ல் திருக்கார்த்திகையன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ஏற்றப்படவில்லை. இது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. அறங்காவலர்கள் குழு கலைக்கப்பட்டு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் கோவில் நிர்வாகத்தை கவனிக்க உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகிய இருவரும் மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தனர். கோவில் நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு, மாலையில் தீபம் ஏற்றுவது குறித்து, பட்டர்கள், கோவில் நிர்வாகத்துடன் ஆலோசித்தனர். மாலையில் யார், யார் தீபம் ஏற்ற வேண்டும் என இறுதி செய்ய ஹிந்து அமைப்பினர்கள், உள்ளூர்காரர்கள், பட்டர்களுடன் ஆலோசிக்கின்றனர். தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தீபத்தூணைச் சுற்றி தற்காலிக மேடை அமைக்க பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தீபம் ஏற்ற தேவையான பொருட்களை கோவில் பணியாளர்கள் மலை மீது எடுத்து சென்றனர். தீபத்தூணில் தீபம் ஏற்ற அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.