காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலில்சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2026 01:11
ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் சுயம்பு ஸ்ரீ வரசித்தி விநாயக சுவாமி தேவஸ்தானத்தில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள தேவஸ்தான ஆஸ்தான மண்டபத்தில், சங்கடஹர சதுர்த்தி விரதம் காலை முதல் மாலை வரை 4 பிரிவுகளாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் பூதலப்பட்டு எம்.எல்.ஏ. கலிகிரி முரளிமோகன், தேவஸ்தான செயல் அலுவலர் பென்சல கிஷோர், கண்காணிப்பாளர் வாசு, கோயில் ஆய்வாளர்கள் பாலாஜி நாயுடு, ரவி, அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.