Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் தீபத் தூணில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒரு குடிமகனின் பிரார்த்தனை: நீதியின் சுடரும், குன்றின் மேல் இட்ட விளக்கும்.. இது நம்பிக்கையின் தீபம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஒரு குடிமகனின் பிரார்த்தனை: நீதியின் சுடரும், குன்றின் மேல் இட்ட விளக்கும்.. இது நம்பிக்கையின் தீபம்!

பதிவு செய்த நாள்

28 நவ
2026
12:11

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் இன்று மாலை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி தீபம் ஏற்றப்படுகிறது. இது குறித்து பக்தர்கள் க;றியதாவது:


சாதாரணச் சாமானியக் குடிமக்களுக்குக் கடைசிப் புகலிடமாகவும், நியாயமும் நீதியும் தடையின்றித் தழைக்கும் இடமாகவும் திகழ்வது நீதிமன்றம். அத்தகைய உயரிய இடத்திலிருந்து பிறக்கும் தீர்ப்புக்கு நிர்வாகமோ அரசாங்கமோ செவிசாய்க்க மறுக்கும்போது, சாமானிய மனங்களில் ஏற்படும் தயக்கமும் கலக்கமும் இயல்பானதே. குற்றமிழைத்தவர்களுக்குத் தகுந்த தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியும் எவ்வாறு சாத்தியமாகும் என்ற கேள்வி அண்மைக்காலமாகப் பலரின் சிந்தனையிலும் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், சட்டத்தின் ஆட்சியும் நீதியின் மாண்பும் எவ்வளவு வலிமையானவை என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்தியுள்ளது. அறத்தையும் நீதியையும் காக்கும் கவசமாக நீதிமன்றம் நிலைத்து நிற்கிறது என்பதை இது உறுதி செய்கிறது. நீதிமன்ற உத்தரவுகள் மதிக்கப்படாத சூழல் உருவாகும்போது, "இந்த மண்ணில் எப்படி நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வது?" என்ற கேள்வி ஒவ்வொரு சாமானியனுக்குள்ளும் எழுகிறது. அந்தக் கேள்விக்கான தெளிவான பதிலாக இந்தத் தீர்ப்பு அமைந்திருக்கிறது; இனி வரும் நாட்களில் இதன் முழுமையான தாக்கத்தையும் செயல்பாட்டையும் நாம் பொறுத்திருந்து காண வேண்டும்.


மனித சமூகம் என்பது சட்டதிட்டங்களுக்கும், தார்மீக எல்லைக்கோடுகளுக்கும் உட்பட்டது. நாம் வகுத்துக்கொண்ட விதிகளுக்கும் நீதியின் நெறிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பதால்தான் மனித மாண்பும் சமூக ஒழுங்கும் காப்பாற்றப்படுகின்றன. இந்தக் கட்டுப்பாடுகள் தளரும்போதோ அல்லது அவமதிக்கப்படும்போதோ, சமூகத்தின் தரமும் மதிப்பும் சிதைந்து, மனித வாழ்வு நெறி பிறழ்ந்த நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளது. எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டத்தின் மாண்பை மதித்து, நீதித்துறையின் தீர்ப்புக்குச் செவிசாய்த்துத் தங்களது கடமையைச் செய்ய வேண்டும்.


நம்பிக்கையின் தீபம்:  ஒரு குடிமகனின் பிரார்த்தனை


இந்த விவகாரம் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ நம்பிக்கையையோ சார்ந்த பிரச்சனை என்பதைக் கடந்து, நீதியின் மேன்மையும் சட்டத்தின் ஆட்சியும் நிலைநாட்டப்பட வேண்டிய பிரச்சனையாக இன்று உருவெடுத்துள்ளது. அரசியல் நோக்கங்களுக்கும் மாறுபட்ட கருத்துகளுக்கும் அப்பாற்பட்டு, நீதியின் ஒளியும் வாழ்வியல் சுடரும் நிலைபெற வேண்டும். "குன்றின் மேல் இட்ட விளக்காக" அந்தத் தீபம் ஒளிர்ந்து, நீதியின் வலிமையை உலகுக்குப் பறைசாற்ற வேண்டும். அந்த அறம் நிச்சயம் வெல்லும் என்ற நம்பிக்கையோடு, ஒரு சாதாரண இந்தியக் குடிமகனாக அந்த இறைவனிடம் மனமுருக(னை)ப் பிரார்த்திக்கிறேன். வரதராஜபுரம் சே.சுப்பராமன். முருக பக்தர்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) மாலை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இடையீட்டு மனு மீதான விசாரணையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar