வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2026 03:11
வாரணாசி: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபாடு செய்தனர். இருவரும் கோயிலுக்குச் சென்று, அங்குள்ள இறைவனை வணங்கி ஆசி பெற்றனர்.
தொடரந்து வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் 5.0 பதிப்பை துவக்கி வைத்து துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தாய்மொழி மீதும், தாய் மீதும் பற்று இருக்கலாம். ஆனால் தாய்மொழியை பழிக்கக்கூடாது. திருக்குறள் தமிழருக்கு மட்டுமல்ல, மனித குலத்துக்கே பொதுமறை. காசி தமிழ் சங்கமம், திருக்குறளையும், வள்ளுவரையும் முதன்மைப்படுத்துகிறது. பாரதியார் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை காசியில் கழித்தார். பிரதமர் மோடி தமிழுக்கு மகத்தான பணி செய்துள்ளார். உலகிற்கே மிகவும் தொன்மையான மொழி தமிழ் என உரக்க சொன்னவர். யாதும் ஊரே யாருவம் கேளீர் என உரக்க சொன்ன போது நம் விருந்தோம்பல் பண்பை உலகம் கண்டது. இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: அலை அலையாய் ஓடும் கங்கையைப் போன்ற சடாமுடியைக் கொண்டவரும், தமது இடது பக்கத்தில் கௌரியை எப்போதும் கொண்டிருப்பவரும், நாராயணனின் அன்புக்குரியவரும், மன்மதனின் செருக்கை அழித்தவருமான, வாரணாசியின் இறைவனாம் விஸ்வநாதனை நான் வணங்குகிறேன். இன்று, பரம்பொருளான மகாதேவனின் புனித நகரமான காசியில், மாண்புமிகு துணை ஜனாதிபதி திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து, பாபா ஸ்ரீ விஸ்வநாதரைத் தரிசித்து, வழிபாடு செய்யும் நற்பேறு எனக்குக் கிடைத்தது. அனைவருடைய நலனுக்காகவும் செழுமைக்காகவும் நான் இறைவனாம் போலேநாத்திடம் (சிவபெருமானிடம்) பிரார்த்திக்கிறேன். இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.