Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தனித்து நின்று துணிச்சலோடு சமாளி! இப்படித்தான் கும்பிடணும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அவள் நித்ய சுமங்கலி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2013
05:02

நடமாடும் தெய்வம் என பக்தர்களால் போற்றப்பட்ட காஞ்சி மகாபெரியவர், அன்றைய தினம் நித்ய பூஜைகளை முடித்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். பலரும் அவரவர் குறைகளைக்கூறி, அதற்குரிய தீர்வை அருளுமாறு வேண்டிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒருபெண் மட்டும் அழுது கொண்டிருந்தாள். அவளது நெற்றியில் திலகமில்லை. தலையில் பூ வைக்கவில்லை. தோற்றமோ இளமையாயிருந்தது. அவளைத் தன்முன் அழைத்து வரும்படி, சீடர்களுக்கு உத்தரவிட்டார். கனிவுடன், என்னம்மா உன் பிரச்னை! ஏன் அழுது கொண்டிருக்கிறாய்? என்றார். ஐயா! என் கணவர் வெளிமாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் இறந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. அவரது உடலை எப்படி கொண்டு வருவது, கொண்டு வந்தாலும் இறுதிக்காரியங்களை எப்படி செய்வது என தெரியவில்லை, என்று கதறினாள். முக்காலமும் உணர்ந்த முனிவரான மகாபெரியவர், இதற்கு பதிலேதும் சொல்லவில்லை. அவளை நோக்கி நான்கு விரல்களை மட்டும் நீட்டினார். அவளை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி சீடர்களிடம் கூறினார். அந்தப் பெண்ணுக்கு ஏதும் புரியவில்லை. தன்னுடன் வந்த சீடர்களிடம், பெரியவர் என்னிடம் நான்கு விரல்களைக் காட்டினாரே! அதன் பொருள் புரியவில்லையே! என்று கேட்டாள். அம்மா! இன்னும் நான்கு நாட்கள் நீங்கள் எந்தக் காரியமும் செய்யவேண்டாம். பொறுமையாக இருங்கள், என்றனர் அவர்கள். அவளும் வீடு திரும்பி விட்டாள். என்ன ஆச்ச ரியம்! மூன்றாம் நாள் மாலையில் அவளது கணவர் வீடு வந்து சேர்ந்தார். அவளோ, ஆனந்தத்தின் உச்சிக்கே போய்விட்டாள். அவர் கையாலேயே பொட்டு வைக்கச் சொல்லி, பூச்சூடினாள். மறுநாள் காலையில், ஆனந்தக்கண்ணீர் பொங்க, கணவருடன் மகாபெரியவர் முன் வந்து நின்றாள்.  தீர்க்க சுமங்கலியாக இரு! என வாழ்த்திய பெரியவர், அவர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.  தன் ஞானத்தால், ஒரு சுமங்கலியின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய பெரியவரின் கருணையை வார்த்தைகளால் வடிக்க முடியாது. அன்று மட்டுமல்ல! இன்றும் அவரை நம்பி வணங்குவோரின் குறைகளைத் தீர்த்து கருணையுடன் அருள்கிறார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar