பதிவு செய்த நாள்
18
பிப்
2013
11:02
புதுச்சேரி: லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் சின்மயா சூர்யா கோவிலில் ரத சப்தமி தினத்தை யொட்டி சமஷ்டி மகா காயத்ரி ஹோமம் நேற்று நடந்தது.
இதனையொட்டி காலை 6.30 மணிக்கு பூர்வாங்க பூஜை, 7.00 மணிக்கு 3 லட்சம் காயத்திரி மந்திரங்கள் முழங்க, மகா ஹோமம் விமர்சையாக நடந்தது. சின்மயா சூர்ய பகவான் குதிரைகள் பூட்டிய ரதத்தில் பத்மாசனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 16 ஹோம குண்டங்களில் நடந்த யாகத்தில் 2,000 பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் சூர்ய மந்திரங்கள் அடங்கிய சூர்ய ஆராதனை புத்தகம், ஹோம பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7.30 மணிக்கு பூர்ணாஹூதி, சாந்தி மந்திரங்களுடன் மகா ஹோமம் நிறைவு பெற்றது.ஹோமத்தில், ராஜா சாஸ்திரிகள் மற்றும் அவரது வேத பாடசாலை மாணவர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை சின்மயா மிஷன் புதுச்சேரி ஆச்சார்யா பிரம்மசாரினி சுருதி சைதன்யா, சாந்தி, ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர், செயலாளர் ராஜநாராயணன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ரேகா ஆகியோர் தலைமையில் சின்மயா உறுப்பினர்கள் செய்தனர்.