பிடித்து வைத்தால் பிள்ளையார் என்றொரு பழமொழி உண்டு. விநாயகர் மூலதார மூர்த்தியாக இருப்பதால் எந்தவித மந்திரப்பிரதிஷ்டையும் தேவையில்லை என்பதால் இப்படி செய்கிறார்கள். மஞ்சள், களிமண், சாணம், சந்தனம் என எதில் பிடித்து வைத்தாலும் விநாயகர், அங்கே எழுந்தருளி விடுவார்.