மகாதேவி மங்கலம் கோவிலில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய தேர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2013 10:03
செஞ்சி: மகாதேவி மங்கலம் பிடாரியம்மன், மாரியம்மன் கோவிலுக்கு 9 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக தேர் வடிவமைத்துள்ளனர்.செஞ்சி தாலுகா மகாதேவி மங்கலம் கிராமத்தில் உள்ள பிடாரியம்மன், மாரியம்மன் கோவிலில் கடந்த 50 ஆண்டுகளாக தேர் திருவிழா நடத்தி வருகின்றனர். இதற்கான தேர் பழமை காரணமாக பலவீனமடைந்துள்ளது. இதனால் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்வதற்கு கிராம மக்கள் முடிவு செய்தனர்.இதன் படி முன்னாள் ஊராட்சி தலைவர் சீனுவாசன் மேற்பார்வையில் கடந்த 2011ம் ஆண்டு தேர் கட்டும் பணி துவங்கியது. திருவண்ணாமலையை சேர்ந்த திருநாவுக்கரசு ஸ்தபதி 21 அடி உயரத்தில் புதிய தேர், வடிவமைத்துள்ளார்.இலுப்பை, வேங்கை, காட்டுவா, அத்தி, வேம்பு உள்ளிட்ட மரங்களை கொண்டு தேரை செய்துள்ளனார். இதில் பொம்மைகள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் முடிந்ததும் ஏப்ரல் 7ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.