பூர்ணகும்பம் என்றால் நிறைகுடம். குடம் முழுவதும் நீர் நிரப்பி, அதன் மேல் தேங்காய், மாவிலையால் அலங்கரித்துஇருப்பதே பூரணகும்பம். அதன் மேற்பரப்பில் நூல்சுற்றவும் செய்வர். லட்சுமியின் அம்சமான இது மங்கலம், வளம் இவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது. ஒரு காலத்தில் மன்னர்களுக்கு வழங்கப்பட்ட இந்த மரியாதை, இப்போது உயர்ந்த பட்டம், பதவியில் வகிப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.