நாளைக்கு ராம பட்டாபிஷேகம் என்ற விஷயத்தைக் கைகேயியிக்கு எடுத்துச் சொன்னாள் கூனி. ராமனும் என் பிள்ளை தானே என்று சொல்லி, அவளுக்கு ஒரு முத்துமாலையைப் பரிசளித்து மகிழ்ந்தாள். கூனியின் சூழ்ச்சி மிக்க பேச்சு கைகேயியின் மனதை அடியோடு மாற்றியதோடு ராமனை காட்டுக்கும் செல்ல வைத்தது. ஆனால், பரதன் மனதை கூனியால் மாற்ற முடியவில்லை. பரதன் தன் அண்ணன் ராமனின் பாதுகைக்கு பட்டம் சூட்டி நாட்டை ஆட்சி செய்தான். தர்மம், நீதி, நேர்மை வழுவாத நல்லாட்சியை மக்களுக்கு வழங்கினான். தன் தாயையும், தாதி கூனியையும் நிந்திக்கவில்லை. நடந்த தவறுக்கு காரணம் தன்னுடைய பாவம் என்று சமாதானம் தேடிக் கொண்டான். ஆனால், உண்மையில் பரதன் ஒரு பாவமும் அறியாதவன். விவேகம் மிக்க நல்லவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும்.