நகரி: நகரி அடுத்துள்ள சிந்தலப்பட்டடையில் உள்ள கல்யாணராமர் கோவிலில், நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கோவிலில் மூலவர், விமான கோபுர கலசங்கள் மீது அர்ச்சகர்கள், புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் மூலவர் கல்யாணராமர் சன்னிதியிலும், மற்ற சன்னிதிகளிலும் மகா அபிஷேகம் நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், உற்சவர் திருவீதி உலாவும் சிறப்பாக நடந்தது.