பதிவு செய்த நாள்
15
மார்
2013
10:03
பழநி: கொடுமுடி தீர்த்தக்காவடிக்கு புகழ் பெற்ற, பழநி பங்குனி உத்திர திருவிழா மார்ச் 20ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொடியேற்றத்தன்று, பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை, திருஆவினன்குடி கோயிலில், எழுந்தருளி, காலை 11.20 மணிக்கு மேல் 12 மணிக்குள் மிதுன லக்கினத்தில் கொடியேற்றமும், உச்சிகாலத்தில் மலைக்கோயிலில் காப்புகட்டும் நடக்கிறது.மார்ச் 20 முதல் 29 வரை, 10 நாட்கள் பங்குனி உத்திர திருவிழா நடைபெறும்.ஆறாம் நாள், மார்ச் 25-ல் இரவு 7.30 மணிக்குமேல் 8.30 மணிக்குள் திருக்கல்யாணமும், வெள்ளித்தேரோட்டமும், ஏழாம் நாள் (மார்ச் 26) மாலை 4.35 மணிக்கு பங்குனி உத்திர திருத்தேரோட்டமும் நடக்கிறது.பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு வசதிக்காக மலைக் கோயிலில் வெளிப்பிரகாரத்தில் நிழற்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை பழநி கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் ராஜமாணிக்கம் செய்து வருகின்றனர்.