பதிவு செய்த நாள்
15
மார்
2013
10:03
கடையம்: கீழக்கடையம் தங்கம்மன், காளியம்மன் கோயிலில் 18ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கீழக்கடையம் குமரேசபுரம் காலனி அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தங்கம்மன், காளியம்மன் கோயிலில் வரும் 17ம்தேதி காலை 5 மணிக்கு மங்கள இசை, மகா அனுக்ஞை, புண்யாவாசனம், கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள் துவங்குகிறது. காலை 9 மணிக்கு ஆதித்யாதி நவக்கிரக ஹோமம்,லட்சுமி சுதர்சன ஹோமம், துர்கா, ம்ருத்யுஞ்சய ஹோமங்கள் நடக்கிறது.மாலை 4 மணிக்கு மேல் தீர்த்த சங்கிரகணமும், இரவு 7 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், ஆச்சார்ய வர்ணம், யஜமான வர்ணம், பாலிகாபூஜை, கலாகர்சனம், கடஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகபூஜை ஆகிய வைபவங்கள் நடக்கிறது. இரவு 11மணிக்கு மேல் யந்திர ஸ்தாபனம், சாத்த பந்தனம், பிம்ப சுத்தி, ரக்ஷாபந்தனம் நடக்கிறது. கும்பாபிஷேக நாளான 18ம்தேதி காலை 6.30 மணிக்கு இரண்டாம் யாக சாலை பூஜையும், ஸ்பர்சா குதி, மகா பூர்ணாகுதி, பின்னர் காலை 9மணிக்கு மேல் 10மணிக்குள் விமான அபிஷேகம், தங்கம்மன், காளியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகமும், பின்னர் அன்னதானமும் நடக்கிறது. மாலை புஷ்பாஞ்சலியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.