தென்காசி: ஆய்க்குடி பூலுடையார் சாஸ்தா கோயிலில் இன்று வருஷாபிஷேக விழா நடக்கிறது. ஆய்க்குடி பூலுடையார் சாஸ்தா உடனுறை பேச்சி பிரம்மராட்சத அம்மன் கோயிலில் இன்று (15ம் தேதி) வருஷாபிஷேக விழா நடக்கிறது. காலை சிறப்பு பூஜை வழிபாடு, இரவு நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியார் செய்துள்ளனர்.