பாவூர்சத்திரம்: சின்னநாடானூர் சண்முகபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சண்முகபுரம் காளியம்மன், பேச்சியம்மன், பைரவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இரண்டு நாட்கள் நடந்தது. முதல்நாள் மாலை 4 மணிக்கு குற்றாலத்திலிருந்து புனித நீர் கொண்டு வருதல், மாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரகஹோமம், பிரவேச பலி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பூஜை நடந்தது. 2ம் நாள் காலை 9மணிக்கு 2ம் கால யாக சாலை பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. 10.30 மணிக்கு காளியம்மன், பேச்சியம்மன், பைரவர், பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாக்கமிட்டியார் ஊர் பொதுமக்கள் இணைந்து கும்பாபிஷேகம் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.