நம் மனதை இயக்குபவர் சந்திரன். இவரை மாத்ருகாரகர் (தாய்க்குரிய கிரகம்)என்றும் குறிப்பிடுவர். ராகு, கேது, சனி போன்ற பாவகிரகச் சேர்க்கை சந்திரனுக்கு இருக்குமானால், மனோபலம் குறைந்துவிடும். இதனால், குழப்பான மனநிலை, முடிவெடுக்கும் திறன்இன்மை உண்டாக வாய்ப்புண்டு. இதிலிருந்து விடுபட மிக எளிய பரிகாரமாக சந்திரதரிசனம் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் அமாவாசையை அடுத்து வரும் சந்திர தரிசனத்தன்று மாலை 6 மணிமுதல் 6.45 மணிக்குள் செய்யவேண்டும். இதை மூன்றாம்பிறை காணுதல் என்பர். இதைக்காணும் போது சந்திரனுக்குரிய ஸ்லோகத்தை 12முறை சொல்வது நல்லது. ததி ஸங்க துஷா ராபம் க்ஷீரோ தார்ணவ ஸம்பவம் நமாமி சசி நம் ஸோமம் ஸம போர் மகுட பூஷணம் என்று சொல்லுங்கள். தமிழில் திருப்பாற்கடலில் பிறந்த சந்திரனே! தயிர், சங்கு, பனித்துளி ஆகியவற்றின் வெண்மைக்கு நிகரான தூய ஒளி கொண்டவனே! சிவபெருமானின் நெற்றிக்கு அழகு தருபவனே! உன்னைப் போற்றி வணங்குகிறேன். சந்திரதரிசனத்தை தொடர்ந்து தரிசித்து வருவோருக்கு சிவனருளால் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம். சதுர்த்தியன்று சந்திரனைப் பார்க்கக்கூடாது.