விதி மடு என்றால், கடவுள் மலை. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். விதி எப்படியிருந்தால் என்ன! இறைவழிபாட்டில் தீவிர நம்பிக்கையுள்ளவன் அதைப் புறக்கணித்து விடுகிறான். சத்தியவான் சாவித்திரி, மார்க்கண்டேயர் ஆகியோர் இறைவனை நம்பி விதியையே வென்ற சரித்திரத்தை ஆன்மிகம் நமக்கு போதித்திருக்கிறது.