Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குறுந்தொகை (பகுதி-1) குறுந்தொகை (பகுதி-3)
முதல் பக்கம் » குறுந்தொகை
குறுந்தொகை (பகுதி-2)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
12:03

குறுந்தொகை - 51. நெய்தல் - தோழி கூற்று

கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூலறு முத்திற் காலொடு பாறித்
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
யானும் காதலென் யாயுநனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்  5
அம்ப லூரும் அவனொடு மொழிமே.  
- குன்றியனார்.  

குறுந்தொகை - 52. குறிஞ்சி - தோழி கூற்று

ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்
சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டே
நரந்த நாறுங் குவையிருங் கூந்தல்
நிரந்திலங்கு வெண்பல் மடந்தை
பரிந்தனென் அல்லனோ இறையிறை யானே.  5
- பனம்பாரனார்  

குறுந்தொகை - 53. மருதம் - தோழி கூற்று

எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி யன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை  5
நேரிறை முன்கை பற்றிச்
சூரர மகளிரோ டுற்ற சூளே.  
- கோப்பெருஞ் சோழன்.  

குறுந்தொகை - 54. குறிஞ்சி - தலைவி கூற்று

யானே யீண்டை யேனே யென்னலனே
ஏனல் காவலர் கவணொலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீனெறி தூண்டிலி னிவக்கும்
கானக நாடனொ டாண்டொழிந் தன்றே.  5
- மீனெறிதூண்டிலார்.  

குறுந்தொகை - 55. நெய்தல் - தோழி கூற்று

மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப்
பொங்குபிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக்
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட் டாகும்
சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே.  5
- நெய்தற் கார்க்கியர்.  
 
குறுந்தொகை - 56. பாலை - தலைவன் கூற்று

வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்
வருகதில் அம்ம தானே
அளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே.  5
- சிறைக்குடி ஆந்தையார்.  

குறுந்தொகை - 57. நெய்தல் - தலைவி கூற்று

பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவேம் ஆகிய வுலகத்  5
தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே.  
- சிறைக்குடி ஆந்தையார்.  

குறுந்தொகை - 58. குறிஞ்சி - தலைவன் கூற்று

இடிக்குங் கேளிர் நுங்குறை ஆக
நிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்  5
பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே.  
- வெள்ளி வீதியார்.

குறுந்தொகை - 59. பாலை - தோழி கூற்று

பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அதலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்
நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும்
சுரம்பல விலங்கிய அரும்பொருள்  5
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே.  
- மோசி கீரனார்.   

குறுந்தொகை - 60. குறிஞ்சி - தலைவி கூற்று

குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும்  5
பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே.  
- பரணர்.  

குறுந்தொகை - 61. மருதம் - தோழி கூற்று

தச்சன் செய்த சிறுமா வையம்
ஊர்ந்தின் புறாஅர் ஆயினுங் கையின்
ஈர்த்தின் புறூஉம் இளையோர் போல
உற்றின் புறேஎம் ஆயினும் நற்றேர்ப்
பொய்கை யூரன் கேண்மை  5
செய்தின் புற்றனெஞ் செறிந்தன வளையே.  
- தும்பிசேர் கீரனார்.

குறுந்தொகை - 62. குறிஞ்சி - தலைவன் கூற்று


கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிதழ்க் குவளையொ டிடையிடுபு விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே. 5
- சிறைக்குடி ஆந்தையார்.   

குறுந்தொகை - 63. பாலை - தலைவன் கூற்று

ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்லெனச்
செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு
அம்மா அரிவையும் வருமோ
எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே. 
- உகாய்க்குடிகிழார்  

குறுந்தொகை - 64. முல்லை - தலைவி கூற்று

பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்
புன்றலை மன்றம் நோக்கி மாலை
மடக்கண் குழவி அலவந் தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்
சேயர்தோழி சேய்நாட் டோரே.  5
- கருவூர்க் கதப்பிள்ளை.  

குறுந்தொகை - 65. முல்லை - தலைவி கூற்று

வன்பரல் தெள்ளறல் பருகிய இரலைதன்
இன்புறு துணையொடு மறுவந் துகளத்
தான்வந் தன்றே தளிதரு தண்கார்
வாரா துறையுநர் வரனசைஇ
வருந்திநொந் துறைய இருந்திரோ எனவே.  5
- கோவூர்கிழார்.  

குறுந்தொகை - 66. முல்லை - தோழி கூற்று

மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா அளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே.  5
- கோவர்த்தனார்.

குறுந்தொகை - 67. பாலை - தலைவி கூற்று

உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்
பொலங்கல ஒருகா சேய்க்கும்
நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே.  5
- அள்ளூர் நன்முல்லையார்.  
 
குறுந்தொகை - 68. குறிஞ்சி - தலைவி கூற்று

பூழ்க்கா லன்ன செங்கால் உழுந்தின்
ஊழ்ப்படு முதுகாய் உழையினங் கவரும்
அரும்பனி அற்சிரந் தீர்க்கும்
மருந்துபிறி தில்லையவர் மணந்த மார்பே.  
- அள்ளூர் நன்முல்லையார்.  

குறுந்தொகை - 69. குறிஞ்சி - தோழி கூற்று

கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்  5
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.  
- கடுந்தோட் கரவீரனார்.  

குறுந்தொகை - 70. குறிஞ்சி - தலைவன் கூற்று

ஒடுங்கீர் ஓதி ஒண்ணுதற் குறுமகள்
நறுந்தண் ணீரள் ஆரணங் கினளே
இனையள் என்றவட் புனையள வறியேன்
சிலமெல் லியவே கிளவி
அணைமெல் லியள்யான் முயங்குங் காலே.  5
- ஓரம்போகியார்.  

குறுந்தொகை - 71. பாலை - தலைவன் கூற்று

மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே
அரும்பிய சுணங்கின் அம்பகட் டிளமுலைப்
பெருந்தோள் நுணுகிய நுசுப்பிற்
கல்கெழு கானவர் நல்குறு மகளே.  
- கருவூர் ஓதஞானியார்.  

குறுந்தொகை - 72. குறிஞ்சி - தலைவன் கூற்று

பூவொத் தலமருந் தகைய ஏவொத்து
எல்லாரும் அறிய நோய்செய் தனவே
தேமொழித் திரண்ட மென்தோள் மாமலைப்
பரீஇ வித்திய ஏனற்
குரீஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே.  5
- மள்ளனார்.  

குறுந்தொகை - 73. குறிஞ்சி - தோழி கூற்று

மகிழ்நன் மார்பே வெய்யை யானீ
அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போக்கிய
ஒன்று மொழிக் கோசர் போல
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமாற் சிறிதே.  5
- பரணர்.  

குறுந்தொகை - 74. குறிஞ்சி - தோழி கூற்று

விட்ட குதிரை விசைப்பி னன்ன
விசும்புதோய் பசுங்கழைக் குன்ற நாடன்
யாம்தற் படர்ந்தமை அறியான் தானும்
வேனில் ஆனேறுபோலச்
சாயினன் என்பநம் மாணலம் நயந்தே.  5
- விட்டகுதிரையார்.  

குறுந்தொகை - 75. மருதம் - தலைவி கூற்று

நீகண் டனையோ கண்டார்க் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார்வாய்க் கேட்டனை காதலர் வரவே.  5
- படுமரத்து மோசிகீரனார்.

குறுந்தொகை - 76. குறிஞ்சி - தலைவி கூற்று

காந்தள் வேலி ஓங்குமலை நல்நாட்டுச்
செல்ப என்பவோ கல்வரை மார்பர்
சிலம்பிற் சேம்பின் அலங்கல் வள்ளிலை
பெருங்களிற்றுச் செவியின் மானத் தைஇத்
தண்வரல் வாடை தூக்கும்  5
கடும்பனி அச்சிரம் நடுங்கஞர் உறவே.  
- கிள்ளி மங்கலங்கிழார்.

குறுந்தொகை - 77. பாலை - தலைவி கூற்று

அம்ம வாழி தோழி யாவதும்
தவறெனின் தவறோ இலவே வெஞ்சுரத்து
உலந்த வம்பலர் உவலிடு பதுக்கை
நெடுநல் யானைக் கிடுநிழ லாகும்
அரிய கானஞ் சென்றோர்க்கு  5
எளிய வாகிய தடமென் தோளே.  
- மதுரை மருதன் இளநாகனார்.  

குறுந்தொகை - 78. குறிஞ்சி - பாங்கன் கூற்று

பெருவரை மிசையது நெடுவெள் ளருவி
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பிச்
சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப
நோதக் கன்றே காமம் யாவதும்
நன்றென உணரார் மாட்டும்  5
சென்றே நிற்கும் பெரும்பே தைமைத்தே.  
- நக்கீரனார்.   
 
குறுந்தொகை - 79. பாலை - தலைவி கூற்று

கான யானை தோனயந் துண்ட
பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை
அலங்கல் உலவை யேறி ஒய்யெனப்
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச்  5
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லா தகறல் வல்லு வோரே.  
- குடவாயிற் கீரத்தனார்.  

குறுந்தொகை - 80. மருதம் - பரத்தை கூற்று

கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப்
பெரும்புனல் வந்த இருந்துறை விரும்பி
யாம தயர்கம் சேறும் தானது
அஞ்சுவ துடையள் ஆயின் வெம்போர்
நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி  5
முனையான் பெருநிரை போலக்
கிளையொடுங் காக்கதன் கொழுநன் மார்பே.  
- அவ்வையார்.  

குறுந்தொகை - 81. குறிஞ்சி - தோழி கூற்று

இவளே, நின்சொற் கொண்ட என்சொல் தேறிப்
பசுநனை ஞாழற் பல்சினை ஒருசிறைப்
புதுநலன் இழந்த புலம்புமார் உடையள்
உதுக்காண் தெய்ய உள்ளல் வேண்டும்
நிலவும் இருளும் போலப் புலவுத்திரைக்  5
கடலும் கானலுந் தோன்றும்
மடல்தாழ் பெண்ணையெம் சிறுநல் லூரே.  
- வடம வண்ணக்கண் பேரிசாத்தனார்

குறுந்தொகை - 82. குறிஞ்சி - தலைவி கூற்று

வாருறு வணர்கதுப் புளரிப் புறஞ்சேர்பு
அழாஅல் என்றுநம் அழுதகண் துடைப்பார்
யாரா குவர்கொல் தோழி சாரற்
பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகாற்
கொழுங்கொடி அவரை பூக்கும்  5
அரும்பனி அச்சிரம் வாரா தோரே.  
- கடுவன் மள்ளனார்.  

குறுந்தொகை - 83. குறிஞ்சி - தோழி கூற்று

அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை
தம்மில் தமதுண் டன்ன சினைதொறும்
தீம்பழந் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை வரும்என் றாளே.  5
- வெண்பூதனார்.  

குறுந்தொகை - 84. பாலை - செவிலி கூற்று

பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள்
இனியறிந் தேனது துனியா குதலே
கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி
ஆம்பல் மலரினும் தான்தண் தணியளே.  5
- மோசிகீரனார்.  

குறுந்தொகை - 85. மருதம் - தோழி கூற்று

யாரினும் இனியன் பேரன் பினனே
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர்
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்  5
யாண ரூரன் பாணன் வாயே.  
- வடம வண்ணக்கன் தாமோதரனார்.  

குறுந்தொகை - 86. குறிஞ்சி - தலைவி கூற்று

சிறைபனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறருங் கேட்குநர் உளர்கொல் உறைசிறந்து
ஊதை தூற்றம் கூதிர் யாமத்து
ஆனுளம் புலம்புதொ றுளம்பும்  5
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.  
- வெண்கொற்றனார்.
 
குறுந்தொகை - 87. குறிஞ்சி - தலைவி கூற்று

மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும்
கொடியர் அல்லரெங் குன்றுகெழு நாடர்
பசைஇப் பசந்தன்று நுதலே
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே.  5
- கபிலர்.  

குறுந்தொகை - 88. குறிஞ்சி - தோழி கூற்று

ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன்
சிறுகண் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
தொல்முரண் சோருந் துன்னருஞ் சாரல்
நடுநாள் வருதலும் வரூஉம்
வடுநா ணலமே தோழி நாமே.  5
- மதுரைக் கதக்கண்ணனார்.  

குறுந்தொகை - 89. மருதம் - தோழி கூற்று

பாவடி உரல பகுவாய் வள்ளை
ஏதின் மாக்கள் நுவறலும் நுவல்ப
அழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே
பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
கருங்கண் தெய்வம் குடவரை யெழுதிய  5
நல்லியற் பாவை அன்னஇம்
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே.  
- பரணர்.  

குறுந்தொகை - 90. குறிஞ்சி - தோழி கூற்று

எற்றோ வாழி தோழி முற்றுபு
கறிவளர் அடுக்கத் திரவின் முழங்கிய
மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க்
கலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனி
வரையிழி அருவி உண்துறைத் தரூஉம்  5
குன்ற நாடன் கேண்மை
மென்தோள் சாய்த்துஞ் சால்பீன் றன்றே.  
- மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார்.

குறுந்தொகை - 91. மருதம் - தலைவி கூற்று

அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண்டுறை ஊரன் பெண்டினை யாயிற்
பலவா குகநின் நெஞ்சிற் படரே
ஓவா தீயு மாரி வண்கைக்  5
கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி
கொன்முனை இரவூர் போலச்
சிலவா குகநீ துஞ்சு நாளே.  
- அவ்வையார்.   

குறுந்தொகை - 92. நெய்தல் - தலைவி கூற்று

ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இறையுறை வோங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே.  5
- தாமோதரனார்.  

குறுந்தொகை - 93. மருதம் - தலைவி கூற்று

நன்னலந் தொலைய நலமிகச் சாஅய்
இன்னுயிர் கழியினும் உரைய லவர்நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி
புலவிய தெவனோ அன்பிலங் கடையே.  
- அள்ளூர் நன்முல்லையார்.  

குறுந்தொகை - 94. முல்லை - தலைவி கூற்று

பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே
மானே மருள்வேன் தோழி பானாள்
இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும்
என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே  5
அருவி மாமலை தத்தக்
கருவி மாமழைச் சிலை தருங் குரலே.  
- கதக்கண்ணனார்.  

குறுந்தொகை - 95. குறிஞ்சி - தலைவன் கூற்று

மால்வரை இழிதருந் தூவெள் அருவி
கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
நீரோ ரன்ன சாயல்
தீயோ ரன்னவென் உரனவித் தன்றே.  5
- கபிலர்.  

குறுந்தொகை - 96. குறிஞ்சி - தலைவி கூற்று

அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு
யானெவன் செய்கோ என்றி யானது
நகையென உணரேன் ஆயின்
என்னா குவைகொல் நன்னுதல் நீயே.  
- அள்ளூர் நன்முல்லையார்.  

குறுந்தொகை - 97. நெய்தல் - தலைவி கூற்று

யானே ஈண்டை யேனே யென்னலனே
ஆனா நோயொடு கான லதே
துறைவன் தம்மூ ரானே
மறையல ராகி மன்றத் ததே.  
- வெண்பூதியார்.

குறுந்தொகை - 98. முல்லை - தலைவி கூற்று

இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
நீர்வார் பைம்புதற் கலித்த
மாரிப் பீரத் தலர்சில கொண்டே.  5
- கோக்குள முற்றனார்.  
 
குறுந்தொகை - 99. முல்லை - தலைவன் கூற்று

உள்ளினென் அல்லனோ யானே உள்ளி
நினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்து
மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே
நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்துணச் சென்றற் றாஅங்கு  5
அனைப்பெருங் காமம் மீண்டுகடைக் கொளவே.  
- அவ்வையார்.  

குறுந்தொகை - 100. குறிஞ்சி - தலைவன் கூற்று

அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்  5
பாவையின் மடவந் தனளே
மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே.  
- கபிலர்.  

 
மேலும் குறுந்தொகை »
temple news
குறைந்த அடிகளையுடைய பாட்டால் தொகுக்கப்பெற்ற நூல் ஆதலால் குறுந்தொகை எனப்பட்டது. இந்நூல் 400 பாடல்களைக் ... மேலும்
 
குறுந்தொகை - கடவுள் வாழ்த்து தாமரை புரையுங் காமர் சேவடிப்பவழத் தன்ன மேனித் திகழொளிக்குன்றி ... மேலும்
 
குறுந்தொகை - 101. குறிஞ்சி - தலைவன் கூற்று விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்அரிதுபெறு சிறப்பிற் ... மேலும்
 
குறுந்தொகை - 151. பாலை - தலைவன் கூற்று வங்காக் கடந்த செங்காற் பேடைஎழாஅலுற வீழ்ந்தெனக் கணவற் ... மேலும்
 
குறுந்தொகை - 201. குறிஞ்சி - தலைவி கூற்று அமிழ்த முண்கநம் அயலி லாட்டிபால்கலப் பன்ன தேக்கொக் கருந்துபுநீல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar